'கோட்டா கோ ஹோம்' வாசகத்தை உருவாக்கிய பின்னணியில் ராஜபக்ச குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்ற ராஜபக்ச குடும்பத்துக்குள் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தனியார் ஊடக வலையமைப்பின் தலைவரொருவர் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பு
கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பயன்படுத்திய 'கோட்டா கோ ஹோம்' 'gota go home' என்ற கோஷத்தை முதலில் சமூகமயமாக்கியவர் ராஜபக்ச குடும்பத்தினர். மகிந்தவின் மகன் யோஷித ராஜபக்சவே சமூகவலைத்தளமொன்றில் முதலில் பகிர்ந்தார்.
ஆனால் அவர் அதனை அவர் உருவாக்கினாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை அதிபராக ஆதரித்ததால் தான் ராஜபக்ச குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதாவது எனது நெருங்கிய நண்பரான கோட்டாபய ராஜபக்சவை ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து கோட்டாபயவாக பிரித்து வேறு மார்க்கத்தில் கொண்டு செல்லவுள்ளதாக எண்ணி எனக்கு கடும் எதிர்பினை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் நாட்டை நிர்வகிக்கும் ஜனாதிபதி என்ற வகையில் ராஜபக்ச குடும்பத்தின் முழு எதிர்ப்பினையும் மீறி கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவியதாகவும்,பின்னர் கோட்டாபயவின் முகமும், ஜனாதிபதி கோட்டாபயவின் முகமும் வேறுபட்டமையினால் நேரடியாக அவரிடமிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri
