வெளிநாடு சென்ற கோட்டாபய தொடர்பில் வெளியான தகவல்
நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்பொழுது மியன்மாரில் பத்து நாட்கள் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மலேசியாவின் கோலாலம்பூர் நகரிற்கு பயணம் செய்திருந்தார்.
அங்கிருந்து அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நெருக்கமான வட்டாரத் தகவல்
எவ்வாறெனினும், கோட்டாபய ராஜபக்ச மியன்மாருக்கு சென்று அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது பாரியார் அயோமா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து செய்யும் பகுதியின் ஊடாக மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
முக்கிய பிரபுக்கள் பயணம் செய்யும் பகுதியை பயன்படுத்தாது கோட்டாபய, சரக்கு போக்குவரத்து செய்யும் பகுதியின் ஊடாக பயணம் செய்தார் தெரிவிக்கப்படுகின்றது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
