செய்திகளை உருவாக்க அசத்தல் தொழில்நுட்பம்: கூகுளின் மற்றுமொரு புதிய முயற்சி
கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’(Genesis) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதியதொரு அம்சத்தை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொழில்நுட்பமானது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இத்தகையச் சூழலில் செய்தி எழுதும் திறன் படைத்த ஜெனிசிஸ் (Genesis) குறித்து தகவல் வெளிவந்துள்ளமை வியத்தகு விடயமாக பார்க்கப்படுகின்றது.

எளிமையாகும் செய்தி எழுதும் பணி
தற்போது வரை வடிவமைப்பு கட்டத்தில் உள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.
செய்தி எழுத செய்தியாளர்களுக்கு உதவுவது தான் இதன் பிரதான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செய்தி எழுதும் பணி எளிமையாகும் என சொல்லப்படுகிறது.
தற்போது சிறிய அளவில் இயங்கி வரும் இந்த அம்சம், சில செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri