இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த கூகுள் ஊழியர்கள்: நிறுவனம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
இஸ்ரேல் இடையிலான மேகக் கணிமை(Cloud computing) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ரோஜக்ட் நிம்பஸ்(Project Nimbus) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க்(New York) மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
ஊழியர்கள் கைது
மேலும், கூகுள் கிளவுடின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்த ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய 28 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு தலைவர் க்றிஸ் ராக்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இது போன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், இவற்றை கூகுள் பொறுத்துக் கொள்ளாது என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், இவை சக பணியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் ராக்கோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
