விசா இன்றி இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான நற்செய்தி
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுடன் பிற நாட்டினரும் அதிகளவில் விசா இல்லாமல், இஸ்ரேலில் இருப்பதால், இந்த விடயத்தை இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் முன்வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழு
அதன்படி, அடுத்த கலந்துரையாடலில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் இந்த விடயத்தை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இஸ்ரேல் - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் Tsega Melaku, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி பிரதானி ஹேமந்த ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



