தங்காலையில் கைதான லொறியின் சாரதி நீதிமன்றில் முன்னிலை
தங்காலையில் நேற்று (22.09.2025) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகை போதைப்பெருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் LP 3307 என்ற லொறியின் சாரதி கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இன்று (23.09.2025) ஒப்படைக்கப்பட்டு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில்
இவர் தங்காலை பொலிஸ் பிரிவின் சீனிமோதர கிழக்கு, கொட்டம்பகஹவதுகொட, எண் 43 என்ற முகவரியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட் LP 3307 என்ற லொறியின் உரிமையாளராவார்.
குறித்த நபர் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில், 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், இல. 83, வலவ்வத்த, ஸ்ரீ தர்மராம சாலை, ரத்மலானையில் வசிக்கும் ஹெட்டியாராச்சி கமகே குசும்பிரியா என்பராவார்.
அதன்படி, மூன்று லொறிகளில் இருந்து 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) உட்பட மொத்தம் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



