வடக்கில் வாழும் ஏழை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! விரைவில் வீட்டு உரிமையாளராகலாம்
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் ஏழை மக்களுக்கு, ஆறு பேர்ச் அல்லது எட்டு பேர்ச் அளவில் எதிர்காலத்தில் இவ்வாறு காணிகளை வழங்குவதற்கு திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.
அதனைக் கொண்டு அபிவிருத்தியடைய நாங்கள் உதவிகளை செய்வோம். முதலில் காணியை வழங்கி அவர்களை அபிவிருத்தியடைச் செய்வதுடன், அவர்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றுவதற்கே நாங்கள் முயற்சி செய்கின்றோம்.
வாய்ப்புக்கள் கிடைக்கும் இடத்து இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
