விவசாயிகளுக்கு உரமானியம்: வெளியான மகிழ்ச்சி தகவல்
தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணி மார்ச் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தேங்காய் பயிர் செய்கைக்காக 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரத்தைத் தயாரிக்க அரச உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உரத்தை மானிய விலையில் வழங்கவும் விநியோகிக்கவும் தேவையான பணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபையும் அரச உர நிறுவனங்களும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உர மானியத் திட்டம்
இது தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவிக்கையில், “ சந்தையில் 9000 ரூபாவிற்கு வாங்கப்படும் 50 கிலோகிராம் உர மூட்டையை ரூ.4000 நிவாரண விலையில் வழங்க இம்மாதம் 30 திகதியில் இருந்து வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஹந்தபனகல தென்னை தோட்ட நாற்றங்கால் வளாகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த உர மானியத் திட்டம் ரூபா. 2,000 முதலீட்டில் செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த மானியத்தைப் பெற, தென்னை விவசாயிகள் தென்னை பயிர்ச்செய்கை சபையால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை தென்னை பயிர்ச்செய்கை சபையின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https://coconutsrilanka.lk இல் இருந்து பெறலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
