வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுக்கு நற்செய்தி! ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களை ஒரே இணையத் தளத்தினுள் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தனித்தனியான இணையத்தளங்களை கொண்டிருப்பதன் காரணமாக அவற்றைத் தொடர்பு கொள்வதில் புலம்பெயர் இலங்கையர் உள்ளிட்ட பல தரப்பினரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
தூதரக அதிகாரிகளை இலகுவாக அணுகும் சேவை
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களையும் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு புதுடெல்லி, மாலைத் தீவு, நியூசிலாந்தின் வெலிங்க்டன் உள்ளிட்ட 07 இடங்களில் அமைந்திருக்கும் இலங்கைத்தூதரகங்கள் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உள்நாட்டில் வசிப்போர், புலம்பெயர் இலங்கையர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தூதரக அதிகாரிகளை இலகுவாக அணுகவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam