உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் தங்க காலணியை வென்ற வீரர்!
கால்பந்தாட்ட உலகக் கிண்ண தொடரில் இன்று வரலாறு மாற்றியமைக்கப்பட்டு மூன்றாவது முறையாக ஆர்ஜென்டினா சாம்பியனானது.
இறுதி போட்டியில் ஆர்ஜென்டினாவை எதிர்தாடிய பிரான்ஸ் அணியின் வீரர் கைலியன் எம்பாப்வே ஹாட்ரிக் கோல் அடித்து தங்க காலணி பரிசாக வென்றார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்படும்.
ஆட்டத்தை மாற்றிய எம்பாப்வே
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரில் 8 கோல்கள் அடித்தமைக்காக அவருக்கு இந்த தங்க காலணி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 7 கோல்களை அடித்து ஆர்ஜென்டினா அணி தலைவர் மெஸ்ஸி இரண்டாவது இடத்தை பெற்று தங்க பந்தை பெற்றுக்கொண்டார்.
இந்த இறுதி போட்டியில் மாத்திரம் கைலியன் எம்பாப்வே ஆர்ஜென்டினா அணிக்கு எதிராக 3 கோல்களை அடித்தார்.
இவர் அடித்த கோல்களால் தான் இன்றைய ஆட்டமே மாற்றியமைக்கப்பட்டது.
ஆட்ட நுட்பங்கள்
ஆட்டத்தின் ஆரம்பத்திலே இரு கோல்களை அடித்த ஆர்ஜென்டினா அணியை அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து எம்பாப்வே திணற வைத்தார்.
இவரின் ஆட்ட நுட்பங்களும் பந்து பரிமாற்றமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இன்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு கோல்களையும்,மேலதிக நேரத்தில் ஒரு கோல் மற்றும் இறுதியாக பெனால்டி முறையில் முதல் ஆளாக களமிறங்கி ஒரு கோலையும் அடித்தார்.
இவ்வாறு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்று கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் எம்பாப்வே சாதனை படைத்துள்ளார்.