தலை மன்னாரிலிருந்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்
தலை மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையத்தின் அருகில் வைத்தே நேற்று (04.01.2024) இரவு தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணை
இவ்வாறு கடத்தப்பட்ட 7.70 கிலோ தங்க கட்டிகள் இந்திய மதிப்பில் 4.50 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர், இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |