பிக்குவைப் பயன்படுத்தி தங்கம் கடத்தியவர் கைது
2 கோடி 49 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் தனது பயணப் பையில் வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைச் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, சிரிபுர பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த 58 வயதான பிக்குவே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பிக்கு, டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவையின் கியூ.ஆர்–654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சுங்கப் பிரிவிற்கு பிக்கு வழங்கிய தகவல்

விமானப் பயணத்தில் நட்பு கொண்ட நபர் ஒருவர், இந்தத் தங்க நகைகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்து வந்து தரும்படி தம்மிடம் ஒப்படைத்தார் என்று இந்த பிக்கு சுங்கப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுங்கப் பிரிவினர் அந்த நபரையும் தேடி கைது செய்துள்ளனர்.
இந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த சுங்கப் பிரிவினர் பிக்குவை விடுதலை
செய்து தங்க நகைகளை பிக்குவிடம் கையளித்த நபருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்
விதித்தனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam