வரலாற்றில் முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு
வரலாற்றில் முதன் முறையாக, நேற்று(14.03.2025) தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலர்களை எட்டியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து கவலை என்பவற்றால் பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்தநிலையிலேயே, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தீவிர நிச்சயமற்ற தன்மையை
இதற்கிடையில், இங்கிலாந்தின் ஈவ்லின் பார்ட்னர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹோலண்ட்ஸ், தங்கத்தின் விலை அதிகரிப்பை, "தேர்வுக்கான பீதி சொத்து" என்று விபரித்துள்ளார்.
அத்துடன், இந்த விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிகள் மற்றும் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கைகளால், உலகளாவிய வர்த்தக அமைப்பு எதிர்கொள்ளும் தீவிர நிச்சயமற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |