தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள சடுதியான மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அதன் விலை 1000 ரூபாயால் குறைந்து 377,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
YOU MAY LIKE THIS VIDEO..