ஒரே நாளில் மூன்று முறை உயர்ந்த தங்கத்தின் விலை! இலங்கையில் மீண்டும் அதிரடி மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று ஒரு நாளில் மாத்திரம் இதுவரை 20,000 ரூபாயால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 370,000 ரூபாயாகவும், பின்னர் 375,000 ரூபாயாகவும், மீண்டும் 10,000 ரூபாயால் உயர்ந்து ஒரு பவுண் தங்கம் 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளமையே இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.03.20026) ஒரே நாளில் இரண்டு தடவைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5000 ரூபாயால் அதிகரித்து 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (24.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை நிலவரம்
இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 340400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.