எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் : பேருந்து கட்டணம் மேலும் உயரலாம்
எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின் கீழ், பேருந்துக் கட்டணங்கள் மீண்டும் திருத்தி அமைக்கப்பட வாய்ப்புள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(24.03.2026) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டணம் குறைய வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின் கீழ், பேருந்துக் கட்டணங்களை மீண்டும் திருத்துவது தொடர்பாக கேள்வி எழுந்தபோது, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலைப் பொறுத்து சில முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும், அதேசமயம், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

தற்போது எரிபொருள் விலை உயர்ந்ததால், அதன்படி பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கட்டணங்களை மீண்டும் குறைப்பது தொடர்பில் விவாதிக்கலாம்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமாவதால் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டால், கட்டண மாற்றங்கள் அவசியமாகும். இருப்பினும், பொதுமக்களுக்கு முடிந்தவரை நிவாரணம் வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam