130 டொலராக அதிகரித்த எண்ணெய் விலை! இலங்கையில் விலைத் திருத்தம் செய்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு
தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரித்த எண்ணெய் விலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் எரிபொருளின் விலை சாதாரண மட்டத்தில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தால் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நாங்கள் விலையில் திருத்தத்தினை மேற்கொள்ள முடியும்.

ஆனால், உலக சந்தையில் எண்ணைய் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி நாங்கள் விலைத் திருத்தம் செய்ய முடியாது.
மேலும், உலகச் சந்தையில் 70 தொடக்கம் 78 அமெரிக்க டொலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 130 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.

இப்படியான நிலையில், விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலையில் மாற்றத்தினை செய்ய முடியாது. இதன்படி, கடந்த இரு முறைகளும் விலை சூத்திரத்திற்கு அமைய நாங்கள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை.
பொதுவாக, உலகச் சந்தையில் எண்ணெய்யின் விலையில் ஏற்ற இறக்கம் குறைவாக இருந்தால், விலை சூத்திரத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும், மே மாதம் 1ஆம் திகதி முதல் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam