கொழும்பில் வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை
கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள வீட்டின் அறையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 26 வயதான சீனப் பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பெண்
கொலை தொடர்பில் இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் போது, குறித்த பெண்ணின் முன்னாள் காதலனால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பெண் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாகவும் அவரது முன்னாள் காதலரான சீன நாட்டவர் இந்தக் கொலையைச் செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam