இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (09.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 640,939.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறிய வீழ்ச்சியாகும்.
இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 642,222 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,660 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,830 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,650 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டம்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : முற்றாக மூடப்பட்டுள்ள வீதி(Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam