வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12) கொண்டாடப்படுவதால், எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
இதற்கு முந்தைய வருடங்களிலும், விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமேயானால் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த வருடம் வடக்கு - கிழக்கு பாடசாலைகள் தொடர்பில் இந்த விடயத்தில் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் எனவும் வடமாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இதனை கருத்திற் கொண்டு வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan