திடீரென சரிவடைந்த இலங்கை ரூபா! தங்கத்தின் விலையும் உயர்ந்தது - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்சசியடைந்திருந்த நிலையில் இன்றையதினம் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, இன்றைய(02.05.2023) தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம்
அதேசமயம், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியும் இன்றையதினம் சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது.
ரூபாவின் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையிலும் மாற்றங்கள் பதிவாகி வருகின்ற நிலையில், கடந்த வாரங்களில் ரூபாவின் பெறுமதியும் தொடர் அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், தங்கத்தின் விலையிலும் தொடர் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இனி வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி பதிவாகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில் தங்கத்தின் விலையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேசமயம், இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பின்னரான நாட்களில் தங்க நகை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சியடைந்திருந்தது.
குறிப்பாக, மிக முக்கிய மங்கள நிகழ்வுகளுக்கு மாத்திரமே கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டு வந்ததாக கொழும்பு செட்டித் தெரு தங்க விற்பனையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமாயின் தங்க விற்பனை பாரிய பின்னடைவை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |