உயரும் ரூபாவும் குறையும் தங்கமும்! இலங்கையின் இன்றைய நிலவரம்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 13 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தங்க நிலவரம்

இதன்படி இன்றைய தினம்(26.05.2023) தங்க அவுன்ஸின் விலை 591,384 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,870 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 153,050 ரூபாவாக பதிவாகியுள்ளது, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,140 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,270 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,100 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam