தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold smuggling Daily Gold Rates Gold
By Benat May 01, 2023 12:30 PM GMT
Report

தங்கம், தமிழர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் ஒன்றித்து போன விடயமாக மாறி விட்டது. 

தங்கம் வாங்குவதும், அணிவதும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது. சமூகதத்திலும் கூட ஒருவரின் மதிப்பை மரியாதையை ஈட்டித் தரும் விடயமாக இந்த தங்கம் காணப்படுகின்றது.  

காலத்திற்கு காலம், தங்க விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் அதற்கேற்றால் போல  மக்களின் தங்கம் வாங்கும் வீதம் கூடிக் குறைகிறது. 

இலங்கையில் சம காலத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தின்  விலை வரலாறு காணாத வகையில் உயர்வைச் சந்தித்திருந்தாலும், தங்க நகைகளை கொள்வனவு செய்வோரின் தொகை சரிவைச் சந்தித்திருந்தாலும் கூட தங்க நகை வாங்குவதற்கான முயற்சிகளை பொதுமக்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

35 முதல் 40  ஆண்டுகளுக்கு முன்னர் உங்களை சுற்றி இருந்த பொருள்களை நினைவிற்கு கொண்டுவந்து பாருங்கள். இன்று உங்கள் கையருகில் இருக்கும் கணினி, தொலைபேசி போன்ற பொருள்கள் உட்பட பல பொருள்கள் அன்று இருந்திருக்காது. ஐம்பது - அறுபது ஆண்டுகள் முன் சென்ற பார்த்தால் இன்று வீட்டில் நிறைந்து இருக்கும் முக்கால்வாசிப் பொருள்கள் யாவும் அன்று இருந்திருக்காது.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்றால் வீட்டின் பொருள்கள் மட்டுமல்ல வீட்டின் வடிவம், கட்டுமான பொருள்கள் அனைத்துமே மாறியிருக்கும். ஆனால் மனித நாகரிகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை வீட்டில் மாறாமல் இருக்கும் ஒரே பொருள் தங்க நகை மட்டுமே. அப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் பயணிக்கும் தங்கம் ஒன்றும் மனிதன் உயிர்வாழ அத்தியாவசமான பொருளல்ல. மாறாக தங்கம் மனித இனத்திற்கு கொடுத்த மகிழ்வை விட, துயரங்கள் அதிகம்.

உலகில் பல படையெடுப்புகள் தங்கத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்த போர்களில்  இழந்த உயிர்களை விட தங்கம் மேலானதாக இருந்து வந்திருக்கின்றது என்றும் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறிய முடிந்தது. 

தங்கத்திற்கு முன்னும் பின்னும் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ பொருள்கள் மதிப்பிழந்துவிட்டன. ஆனால், தங்கம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனை ஆண்டு வருகின்றது. இறுதியில், உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகமாக தங்கம் மாறிவிட்டது.

தங்க ஆபரணங்கள் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான உலோகமாக பார்க்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் இது உதவுகிறது.

இதன் மற்றுமொரு மிக முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும். மேலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில், யர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள்.  அது மட்டுமல்லாமல் தங்களது அந்தஸ்த்தினை தீர்மானிக்கும்  ஒரு காரணியாகவும் தங்கத்தினைப் பார்க்கின்றார்கள். 

குறிப்பாக, திருமணம் போன்ற முக்கிய மங்களகரமான விழாக்களில் தங்கம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.  

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்

அந்த வகையில், தங்க நகைகள் வாங்கும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து பார்க்கலாம்,

தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.  தங்கத்தின் தூய்மையை கரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.

தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. எனவே வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 21கரட், 22கரட் அல்லது 24கரட்  என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.

தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.

மஞ்சள் நிற தங்கம், வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம்.

சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான ரோஸ் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

தங்க விலையை நிர்ணயிக்கும் காரணிகள்

மேலும், தங்க விலை குறித்து நோக்குமிடத்து, தங்க விலைகளை தீர்மானிக்க உதவும் சில அடிப்படை காரணிகள் உள்ளன. 

சர்வதேச சந்தைகளில் பிற பொருட்களின் விலை மாற்றங்கள் மற்றும் இந்த பொருட்களின் தேவை மற்றும் கிராக்கி அமெரிக்க மற்றும் உலகளாவிய நாடுகளின் பணவீக்கம், அதிகரித்த நாணய அச்சிடுதல் ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்துகின்றன.

நாடுகளின், மத்திய வங்கிகளின் செயல்பாடுகள், பண அச்சிடுதல், தங்க கொள்முதல் மற்றும் தங்க விற்பனை போன்றவையும் இவற்றுள் தாக்கம் செலுத்துகின்றது.

 உலகின் மிக விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் விலையில், நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு அளவு, அமெரிக்க டொலரின் மதிப்பு  போன்றனவும் தாக்கம் செலுத்துகின்றது.

தங்க விலை மாற்றத்தில்,  வெளிப்புற பங்குச்சந்தை, பொருளாதார மாற்றங்களும் தீவிர தாக்கம் செலுத்துகின்றன. அதாவது பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது தங்கத்தின் விலை அவ்வளவு மாறாது. ஆனால் மந்தமான பங்குச்சந்தை, பொருளாதார சூழ்நிலையின் போது முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திருப்படுகிறது. அந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்.  

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

செய்கூலி சேதாரம் என்றால் என்ன?

பொதுவாக, நாங்கள் தங்கம் வாங்கச் சென்றால், தங்க நகையின் விலை செய்கூலி மற்றம் சேதாரம் என்பவற்றை கணக்கிட்டு எமக்கு விற்பனை செய்யப்படும்.  அந்த செய்கூலி, சேதாரம் என்றால் என்ன என்பது தெரியுமா?

செய்கூலி என்றால், நாங்கள் ஒரு நகை வாங்குகின்றோம் எனில், அந்த நகையை தனித்து ஒருவர் மாத்திரம் செய்திருக்க மாட்டார்.  அந்த நகையை வடிவமைக்க ஒருவர், வெட்டுவதற்கு ஒருவர், பளபளப்பாக்க ஒருவர் என்று பலர் அந்த நகையின் முழு வடிவத்தின் பின்னணியில் பணியாற்றியிருப்பார்கள். இவர்கள் அனைவரது உழைப்பின் விளைவாகவே இந்த தங்க நகை உருவாகியிருக்கும். எனவே, அந்த நகையை வடிமைக்க பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களுக்கு கொடுக்கும் தொகையே செய்கூலியாக சொல்லப்படுகின்றத.

சேதாரம் என்றால், ஒரு நகையணி செய்யத் தொடக்கத்தில் இடப்படும் தங்கத்தின் அளவு செய்து முடிக்கும்போது இருப்பதில்லை இந்த இடைவெளி தான் சேதாரம் என்பது.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

ஆனால் நடைமுறையில், தங்க நகைகளுக்குக் வியாபாரிகள்  சொல்லும் சேதாரக் கணக்கை மட்டும் யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உள்ளபடி சேதாரம் என்றால் என்ன, சேதாரம் என்கிற பெயரில் ஏன் இவ்வளவு பணத்தை நம்மிடம் வாங்குகிறார்கள், கடைக்காரர்கள் அந்தச் சேதாரத்தை என்ன செய்வார்கள் என்கிற மாதிரியான பல கேள்விகள் உள்ளன.  அதற்கு தங்க வியாபாரத்துறையில் அனுபவம் பெற்ற ஒருவரின் கருத்தினை இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, 

அதன்படி, “எந்தப் பொருளை தயாரித்தாலும் அதில் சேதாரம் என்பது கட்டாயம் இருக்கும். மற்ற பொருட்களில் நாம் இந்தச் சேதாரத்தைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. காரணம், பொருளின் அடக்கவிலையிலேயே சேதாரத்தைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், தங்கத்தின் விலை அதிகம் என்பதால் தங்க நகைகளின் சேதாரம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது.

இயற்கையாகக் கிடைக்கும் தங்கம் ஒவ்வொரு கட்டமாக இழைத்து, ஆபரணமாக மாற்றப்படுகிறது. இப்படி மாறும்போது ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படும். இந்தச் சேதாரத்தைத் தவிர்க்கவே முடியாது.

தங்க நகைகளை கைகளாலும் செய்யலாம்; இயந்திரங்கள் மூலமும் செய்யலாம். நம்மூர் வாடிக்கையாளர்கள் கையால் செய்த நகைகளை அதிகம் விரும்புகிறார்கள். காரணம், அது நீடித்து உழைக்கும். கைகளினால் செய்த நகையில் ஏதாவது பிரச்னை என்றால் அதை எளிதில் சரிசெய்யமுடியும். அதே இயந்திரத்தில் செய்தது எனில், அதன் உறுதித்தன்மையானது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை சரி செய்தது அப்படியே தெரியும்.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

ஆனால், மெஷின் கட்டிங் மூலம் செய்யும்போது கைகளினால் செய்த நகைக்கு ஆகும் சேதாரத்தைவிட குறைவாகவே இருக்கும். கைகளால் நகை செய்யும்போது அதிகமான தங்கத்தைத் தரவேண்டி இருக்கும்.

அதாவது, 24 கிராம் எடைகொண்ட செயினை செய்ய 30 கிராம் தங்கத்தை நகை செய்பவரிடம் தரவேண்டியிருக்கும். 30 கிராம் தங்கக் கட்டியை முதலில் நெருப்பால் சுட்டு, அதை கொல்லன் பட்டறையில் அடித்து சதுரமாக ஆக்கவேண்டும். ஒவ்வொருமுறை நெருப்பில் சுடும்போதும் 30 கிராம் தங்கக் கட்டியில் 0.010 கிராம் எடை குறையும்.

பிறகு கம்பி பிடிக்கும் இயந்திரத்தில் தங்கக் கட்டியை கம்பியாக்கி முடிக்கும்போது சுமார் 0.100 கிராம் முதல் 0.150 கிராம் வரை எடை குறையும். பிறகு கம்பியைத் துண்டு, துண்டாக வெட்டி அந்த துண்டுகளை டிசைனுக்கேற்ற வடிவத்தில் மடக்கவேண்டும். அதன்பிறகு மடக்கிய கம்பிகளை ஒன்றுக்கொன்று மாட்டி இணைக்கவேண்டும். கடைசியாக இணைப்பான் (soldring) மூலமாக இணைக்கப்படும்.

இறுதியாக, கட்டிங் இயந்திரத்தில் டைமண்ட்டூல் மூலமாக கட்டிங் செய்வார்கள். இதுதான் நகை தயாரிப்பின் கடைசி நிலை. இப்படி செய்யும்போது நகை மினுமினுப்பு ஏற்படும். அந்தச் சமயத்தில் தங்கம் மணல் தூள்போல் பறக்கும்.

இதை ஓரளவிற்கு சேகரித்துவிடுவார்கள். அந்தக் கட்டத்தில் 0.100 கிராம் முதல் 0.200 கிராம் வரை எடை இழப்பு ஏற்படும். ஆக, கட்டித் தங்கம் செயினாக முழுமையடையும்போது சேதாரம் 0.600 கிராமிலிருந்து 0.800 கிராம் வரை இருக்கும்.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

சேதாரம் என்பது நகையில் உள்ள வேலைபாட்டிற்குதான். எடை அதிகமாக இருந்து வேலைபாடு குறைவாக இருந்தால் அந்த நகைகளுக்குச் சேதாரம் குறைவாக இருக்கும். அதேசமயத்தில் எடை குறைவாக இருந்து வேலைபாடுகள் அதிகம் இருந்தால் சேதாரம் அதிகமாகும். ஆண்டிக் (பாரம்பரிய வடிவமைப்பு) நகைகளுக்குச் சேதாரம் அதிகமாகக் காரணம், அதிலுள்ள அதிக வேலைபாடுகளே. அதோடு அந்த நகைகளைச் செய்ய அதிக நாட்கள் ஆகும்.

ஒவ்வொரு நகைக் கடையிலும் ஒவ்வொரு மாதிரியான சேதாரம் அல்லது கழிவுக்கான சதவிகிதத்தைக் கணக்கிடுகிறார்கள். இதனை வாடிக்கையாளர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடிவதில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இலங்கையில் தங்க வியாபாரம்

இலங்கையில், கடந்த வருடத்தில் தீவிரமடைந்திருந்த பொருளாதார நெருக்கடியின் பின்னர் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததுடன், தங்க வியாபாரமும் மந்த நிலையை அடைந்தது.  

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka  

பொருளாதார நெருக்கடி நிலை உச்சம் பெற்றிருந்த சமயத்தில், ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து 2 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது.  

குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்தது என்று கூறலாம்.  இதற்கு முன்னரான சந்தர்ப்பத்தில், இலங்கையில் தங்கத்தின் விலை அதிக பட்சமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாவிற்கு சென்றதாக கொழும்பு - செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலானா தங்க நகைக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதை கடந்த காலங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்ததுடன், சேமிப்பிற்காகவும் தங்கம் வாங்கிய நிலை மாறி அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம், அதாவது திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகளுக்கு மாத்திரம் தங்க நகை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டது.  

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

தங்கத்தின் நிலைமை நாளுக்கு நான் கூடிக் கொண்டே தான் செல்கின்றது. இலங்கையை பொறுத்தமட்டில், இலங்கையின் பொருளாதார நிலை தான் தங்கத்தின் பாதிப்பாக இருக்கின்றது. இலங்கையில் தற்போது வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதியின் அளவிற்கு தான் தங்கத்தின் விலையும் இருக்கின்றது.

ஆகவே ஒவ்வொரு நாளும் நாணய பெறுமதி கூடிக் கொண்டு போகும் பொழுது, தங்கத்தின் விலையும் கூடிக் கொண்டே தான் போய் கொண்டிருக்கின்றது. இலங்கையில் பொருளாதாரம் ஒரு ஸ்திர நிலைக்கு வந்தால், தங்க விலை குறையலாம். இந்த தங்க விலை ஏற்றத்தால், தற்போது பெரும் பகுதியான தங்க வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு  தங்கம் கடத்தும் சட்டவிரோத முறையும் அதிகரித்து வருகின்றது. 

இதேவேளை, “இலங்கையில் தங்கத்தின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

இலங்கையில் இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்களில் தங்கமும் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக தங்க இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உலக சந்தைக்கும், இலங்கையின் தங்க நிலவரத்தையும் பொருத்த வரையில் 10000 வித்தியாசத்தில் தங்க விலை நிலவி வருகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இல்லையெனில் அரசாங்கமாவது இறக்குமதி பொறுப்பை ஏற்க வேண்டும். எனினும் இது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. அதேபோன்று அண்மையில் இலங்கையில் திடீரென தங்க விலை குறைந்து அடுத்த சில தினங்களிலே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது.

இதற்கு காரணம் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருந்ததுடன், இலங்கையிலும் டொலரின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதுவே தங்க விலை குறைந்தமைக்கு காரணம். இலங்கையில் தங்க தேவை காணப்படுகிறது. எனினும் இதனை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை. 

24 கரட் தங்கத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கத்தால் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டமையால் 22 கரட் தங்கத்தை கொண்டு வந்து அதை புடம் போட்டு 24 கரட்டாக்கி மீண்டும் 22 கரட்டாக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

நாட்டில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 100 சதவீதம் தங்க வியாபாரம் நடந்திருந்தால் தற்போது 40 சதவீதமே விற்பனை நடக்கிறது. இலங்கையில் தங்க இறக்குமதி தடை நீக்கப்பட்டால் கட்டாயம் இலங்கையில் தங்க விலை குறையும். உலக சந்தையை விட 2000 ரூபா வித்தியாசத்திலேயே தங்கத்தை பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும்.

அதாவது 14,5000 ரூபா வரை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை குறைவதற்கான சாத்தியம் இருக்கிறது. இலங்கையின் நாணய பெறுமதியை வைத்து தான் இலங்கையில் தங்கத்தின் பெறுமதி நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக தங்க இறக்குமதி தடை நீக்கப்படுமாக இருந்தால் தங்கத்தின் பெறுமதியில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும்” என  அவர் உறுதியாக தெரிவித்திருந்தார். 

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம் | Gold Price Today In Sri Lanka

இலங்கை தங்க விலை நிலவரம்

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (28.04.2023) அதற்கு முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில்,  தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டிருந்தது.  

இதன்படி, வெள்ளிக்கிழமை(28) அன்று 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 180,950 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின்  விலை 165,900 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை,  21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 158,350 ரூபாவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகியிருந்தது.

அதேசமயம், உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை ரூபா மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவும் தங்கத்தின் விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் பதிவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US