இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது

Ampara Crime Law and Order
By Farook Sihan Oct 13, 2026 09:07 AM GMT
Report

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேரை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது.

திருட்டு

இச்சம்பவங்கள் குறித்து அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விரிவான விசாரணைகளில், சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் குற்றச் செயல்களின் பின்னர் கொழும்பு - கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது | Gold Chain Theft Four Arrested Ampara

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் நேற்று (12) அம்பாறைப் பகுதிக்குத் திரும்பியதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, 'அம்பாறை இன்' விடுதிக்கு அருகில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்ட அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியரொருவர் கைது செய்யப்பட்டார்.

நால்வர் கைது

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட இரண்டு சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமானது.

அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் கல்முனைத் தங்கக் கடைக்குச் சென்று, அங்கிருந்து உருக்கப்பட்ட நிலையிலிருந்த இரண்டு சங்கிலிகளையும் கைப்பற்றியதுடன், அக் கடையில் பணிபுரிந்த இருவரையும் கைது செய்தனர்.

இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது | Gold Chain Theft Four Arrested Ampara

கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பாம்பன் கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 350 கிலோகிராம் எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன்கள்

பாம்பன் கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 350 கிலோகிராம் எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன்கள்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US