வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து தப்பி ஓடிய இருவர்
மட்டக்களப்பு நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(24) காலையில் இடம்பெற்றுள்ளது ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் சந்தியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் குறித்த வீதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் 78 வயதுடைய வயோதிப பெண்ணே குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்
சம்பவதினமான இன்று காலை 6.30 மணியளவில் வீட்டின் முன் உள்ள வீதி பகுதியை தும்புத் தடியால் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒன்றில் சென்ற இரு இளைஞர்கள் அவரின் கழுத்தில் இருந்த மூன்று இலச்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









