நாணய நிதியத்திற்கு சென்றாவது ஒழுக்கத்தை கற்க வேண்டும்
நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றாவது ஒழுக்கமாக மாற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஒழுக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசாங்கமும் அதனை செய்யாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதனால், சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாவது ஒழுக்கமாக மாறி நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும். மது பழக்கத்திற்கு அடிமையாகி அதில் இருந்து விடுப்பட முடியாமல் போனல், புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவார்கள்.
ஹெரோயின் பழக்கத்தில் இருந்து விடுப்பட முடியாதவர்களை அதில் இருந்து மீட்க கந்தகாடு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவார்கள்.
இதுபோல் எமது அரசுகளுக்கு இதுவரை ஒழுக்கத்தை ஏற்படுத்தும் கடமையை செய்ய முடியாது போயுள்ளது என்பது தெளிவாகியுள்ளது எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.