அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம்: நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி
காசா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும் எனவும் இதனால் இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம் எனவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேலுக்கு தொழில்வாய்ப்பு
"நாங்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது தொழிலாளர்களை நீண்ட காலமாக அனுப்பி வருகின்றோம். அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் அடுத்த கட்டமாக இஸ்ரேலுக்குத் தொழிலுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கின்றார்.
இஸ்ரேலுக்குத் தொழிலுக்குச் செல்ல தற்போது 10 ஆயிரம் பேர் தயாராக இருக்கின்றார்கள் என நான் நினைக்கவில்லை. யுத்தம் இடம்பெறும் நாட்டுக்குச் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள்.
எனினும், தற்போதைய நிலையில் இஸ்ரேலுக்குச் செல்வது எந்தளவு பொருத்தம் எனத் தெரியாது. இது தொடர்பாக நான் தொழில் அமைச்சரிடம் வினவுகின்றேன்.
அத்துடன் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. காசா மீது இஸ்ரேலின் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றோம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டித்திருந்தோம். இதற்குத் தீர்வு காசா மீது தாக்குதல் மேற்கொள்வதல்ல.
பாலஸ்தீன அதிகார சபை ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாக பலரும் கதைத்து வருகின்றனர்.
அமெரிக்காவும் பேசி இருந்தது. அதகார சபை ஊடாகத் தீர்வு காண முடியும் என நான் நினைக்கவில்லை.
அரசியல் தீர்வு
அரசியல் தீர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். அதனால் அரசியல் தீர்வொன்றை வழங்குவதன் மூலமே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
அத்துடன் இலங்கையிலும் நாங்கள் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் இருக்கின்றது.
குறிப்பாக பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கின்றன.
அதனால் அடுத்த தசாப்தத்தில் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.
எனவே, காசா தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பாக ரவூப் ஹக்கீம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
