“#GOHOMEGOTA” – சிங்களவர்கள் பார்க்க மறுக்கும் பக்கம்

Srilanka Protest People Gotabhaya Rajapaksha Sri Lanka Economic Crisis Go Home Gota
By S P Thas Apr 14, 2022 03:03 AM GMT
Report

இலங்கை மீளவும் அரசியல் கொதிநிலையடைந்திருக்கிறது. வழமையாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்படும் அரசியல் கொதிநிலையானது, இம்முறை தெற்கு, மேற்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. எரிவாயு, எரிபொருள், பால்மா, மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் காரணமாக சிங்கள - முஸ்லிம் மக்கள் வீதிக்கு வந்திருக்கின்றனர். இரவு பகல் பாராது போராடுகின்றனர்.

ராஜபக்சவினரை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், “#GOHOMEGOTA” என்கிற பொதுக் கோசத்தின் கீழ் அணிதிரண்டிருக்கின்றனர்.

ராஜபக்சக்களை அகற்றினால் மாத்திரம் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது, இலங்கை இன்று எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சரிவின் மூலத்தை 1948 ஆம் ஆண்டிலிருந்து தேடவேண்டும் என்ற விடயத்தை வடக்கு, கிழக்கில் வாழும் குழந்தையும் தெரிந்துவைத்திருக்கின்றது.

சிங்களவர்களுக்கோ, இந்தப் போராட்டத்தை வடிவமைத்துக்கொண்டிருப்பவர்களோ, எப்போதும்போல பிரச்சினையில் தொடக்கத்தைக் கண்டு சீர்திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, உடனடித் தீர்வைத் தேடித் தெருவில் இறங்கியிருக்கின்றனர்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு விளைவுகளை ஏற்படுத்தப்போகும் இந்தப் பொருளாதார சரிவிற்கு நிதியமைச்சரை மாற்றினால்- மத்திய வங்கியின் ஆளுநரை மாற்றினால் மாத்திரம் தீர்வு கிடைத்துவிடும் என ராஜபக்சக்கள் நம்புவதைப் போலவே, ராஜபக்சக்களை ஆட்சியிலிருந்து அகற்றினால் நாடு செழித்துவிடும் என சிங்கள மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்தப் பொருளாதார சீரழிவின் தொடக்கம், என்றைக்குத் தமிழர்கள் மீதான இனவாதத்தைக் கட்டவிழ்த்து சிங்கள அரச தேர் உருளத்தொடங்கியதோ அன்றே ஆரம்பித்துவிட்டது.

அதாவது 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரமடைந்தவுடனேயே, மகாவம்ச மனநிலையை வெளிப்படுத்துகின்ற - இனவாத ரீதியில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா விவசாய விரிவாக்கம் என்கிற பெயரில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இப்பணியைத் தொடக்கிவைத்தார். தமிழர்களது மரபார்ந்த தாயகப் பகுதிகளாக இருந்த இந்த மாவட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் ஊடாக, தமிழர்களது தாயகக் கோட்பாட்டை சிதைப்பது என்பதே இக்குடியேற்றங்களின் எண்ணமாகவிருந்தது.

சிங்கள குடியேற்றத்திட்டங்களில் ஆரம்பித்த இந்த சர்வாதிகார எண்ணம், ஒவ்வொரு ஆட்சியாளர்களையும் தொற்றிக்கொண்டது.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களில் ஆரம்பித்த இத்தகைய தமிழர் மீதான இனவாத அரசியல், தமிழ் மொழி புறக்கணிப்பு, கல்வித் தரப்படுத்தல், தொல்லியல் ஆக்கிரமிப்பு, வரலாற்றுப் புனைவு, பௌத்தமயமாக்கல், தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட இனச்சுத்தகரிப்பு கலவரங்கள் எனப் பரவியது.

இத்தகைய இனவாதப் பரவல் இராணுவ ஒடுக்குமுறைக்கு வித்திட்டது. மகாவம்ச மனநிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிங்கள பெரும்பான்மைவாத அரசியலுக்கு இது உருசி சேர்த்தது. பேரினவாதத்திற்குப் புஜ பலம் சேர்த்தது. ஒரு கட்டத்தில் இத்தகைய தமிழர் மீதான இனவாதப் போக்கை சரியாகக் கடைபிடிப்பவருக்கே தமது வாக்கு என்கிற அரசியல் மனோநிலைக்கு சிங்கள மக்கள் கொண்டு வரப்பட்டார்கள். அந்த எண்ணத்தை பரப்புரைகளில், ஊடகங்களில், கலை வடிவங்களில் சந்ததி கடத்தினார்கள்.

முழுக்கமுழுக்க அரசியல்வாதிகளினதும், அவர்களை வழிநடத்தும் மகாவம்ச மனநிலையின் பீடாதிபதிகளான பௌத்த தேரர்களினதும் முதலற்ற அரசியல் முதலீடாக இந்த தமிழர் இனவாதம் மாறியது.

இந்தப் பயணத்தின் முடிவாக, யார் அதிகம் தமிழ் மக்கள் மீதான இனவாத நடவடிக்கையை முன்னெடுத்து தனிச் சிங்கள தேசத்தை அமைப்பார்களோ, அவர்களையே தங்கள் மெய்ஞான தலைவர்களாக சிங்கள மக்கள் அடையாளம் கண்டார்கள்.

அத்தகைய தலைவர்கள் தமிழர்களை சகல வழிகளிலும் துவம்சம் செய்யும் படையாட்கள் போலிருந்தனர். தமிழர்களை அழிப்பதற்கான பெரும் படையை கட்டமைப்பவர்களாக இருந்தனர்.

இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற வேறு வழியே இன்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். அது இலங்கையின் படைபல பெருக்கத்திற்குக் காரணமாகியது. மொத்த சனத்தொகையில் 90 வீதமான மக்கள் வறுகைகோட்டின் கீழ்வாழும் நிலையைக்கொண்டிருக்கும் இலங்கை போன்றதொரு நாட்டில் இடம்பெறும் போரானது, அந்நாட்டு பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே போரை மேற்கொண்டு நடத்த கடன் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. தமது மெய்ஞான தலைவர்கள் வெல்லவேண்டும். அதற்கு நிதி வேண்டும்.

எனவே உலகின் எப்பாகத்திலும் கடன்பெற்று, தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற நோக்கில், தம் தலைவர்கள் துண்டுவிரிக்கும் காட்சிகளுக்கு சிங்கள மக்கள் பேராதரவு வழங்கினர்.

தனியொருவரின் தலையில் எத்தனை லட்சம் கடனாக விழுந்தாலும் பொறுத்துக்கொள்வோம், தமிழரின் அரசியல் இறைமையைக் கோரிய விடுதலைப் புலிகளை அழியுங்கள் என உரத்துக்கோசமெழுப்பினர். தமிழர்கள் தங்கியிருந்த பாடசாலைகள், மருத்துவமனைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், அகதி முகாம்கள் என எதையும் பாராது குண்டு மழை பொழிந்து இனப்படுகொலை புரிய தம் கரகோசத்தை வழங்கிக்கொண்டிருந்தனர்.

கடனால் கட்டமைக்கப்பட்ட பேரினவாத அரசியல் அதன் உச்சத்தில் தமிழர்களைக் கொன்று குவித்து வெற்றியீட்டியது. கடன் சூழ் தீவாகி, அதன் கஜானாவே திவாலாகப் போகிறது என்பதை அறியாத சிங்கள மக்கள் இந்த வெற்றியை பட்டாசு வெடித்துக்கொண்டாடினர்.

பாலகன் ஒருவனை பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றமையோ, சரணடைந்த பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் கொன்றமை பற்றியோ, காயமடைந்த நிலையில் சரணடைந்த போராளியின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக்கொன்ற மிலேச்சர்கள் பற்றியோ, சரணடைந்தவர்களை உயிரோடு தீயிட்டுக் கொழுத்தியமை பற்றியா சிறிதளவும் கவலை கொள்ளாது பாற்சோறு உண்டு குதூகலித்தனர்.

இந்தக் குதூகலிப்பின் அனுசரனையாளர்கள் தாம் கடன்பட்டவர்கள், பெற்ற கடனை செலுத்தாவிட்டால், இந்தக் குதூகலிப்பையெல்லாம் பிடுங்கிக்கொள்வார்கள் என்கிற விழிப்புணர்வு கூட சிங்கள மக்களிடம் இருக்கவில்லை.

அந்தளவுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்த சிந்தனையை தமிழர் மீதான இனவாத போதை மறைத்திருந்தது. இந்தப் போதையானது, இந்தியா, சீனா, அமெரி்க்கா போன்ற நாடுகள் இலங்கைத் தீவைத் தம் கடன் வலையில் வீழ்த்தி மொத்தமாக அபரிக்கத் திட்டம் தீட்டியிருந்தமையை முற்றாக மறைத்திருந்தது.

நாட்டுக்கு வரும் வருமானத்தில் பாதிக்கு மேல் கொள்ளையடித்துத் தம் பொக்கற்றுக்களை நிரப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும் சிங்கள மக்கள் கண்ணிலிருந்து மறைத்துவைத்திருந்தது. கண்டும்காணாமல் வாழும் மனத்திடத்தை ஏற்படுத்திக்கொடுத்திருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், புத்திசீவிகள், கருத்தியலாளர்கள் எனப் பலர் உலகமெங்கும் இருப்பினும் தம்மை ஆளவேண்டிய அரசியல்வாதிகள் குறித்து இதே கண்டுங்காணாமல் விடும் பழக்கத்தைத்தான் கொண்டிருந்தனர்.

ஏனெனில் அவர் அனைவரின் கூட்டெண்ணமாக பலமிகு, “ஏக்கிய ராஜ்ஜிய” கனவாக இருந்தது. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தனர். அந்தக் கனவிற்கு தமிழர்களைத் தோற்கடித்த பரம்பரையினரே மிகப் பொருத்தமானவர்கள் என்கிற முடிவுக்கும் வந்திருந்தனர்.

அந்த முடிவின் விளைவாகவே 2019 ஆம் ஆண்டில் மீளவும் ராஜபக்சவினர் ஆட்சியேற்றப்பட்டனர். 69 லட்சம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தனி சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களின் தானைத்தலைவனாயினார்.

அவரும் ஆட்சியேறிய சில மாதங்கள் எளிமையான அவாதார புருசராகவே சிங்கள மக்கள் மத்தியில் வலம்வந்தார். அவரின் துரதிஸ்டம் உலகப் பெருந்தொற்றான  கோவிட் இலங்கைத் தீவை ஆட்டிப்படைத்தது.

“புலிகளை அழித்த எமக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை” என்ற திமிர்த்தனத்தோடு கொரோனாவை அரசு எதிர்கொண்டது. உலக நாடுகள் கோவிட் தொற்றுக்குப் பின்பான பொருளாதார வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்க, கோவிட் தொற்றினால் இறக்கும் உடல்களைப் புதைப்பதா, எரிப்பதா என்பதில் இனவாதம் கக்கிக்கொண்டிருந்தது சிங்கள மக்களின் அரசு.

இவ்வாறு எவ்வித பொருளாதார முன்னாயத்தங்களுமின்றி கொரோனாவை எதிர்கொண்டதன் விளைவு நாட்டை கபளீகரப்படுத்திவிட்டது. இராணுவ பார்வையுடன் கூடிய முகாமைத்துவ நடைமுறைகள், மேலும் பலவீனத்தை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் இலங்கைத் தீவானது இதிலிருந்து மீள்வதற்கு கடன்களையே நம்பியிருக்க வேண்டிருக்கிறது.

கடன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த கடன் என்கிற நிலைக்கு கடன்சூழ் தீவாகி நிற்கிறது இலங்கை. இதனால் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எப்பொருளைப் பெறவும் பணமில்லை.

கடனடிப்படையில் பெறவும் வாய்ப்புக்கள் குறைய எரிபொருள் தொடக்கம், குண்டூசி வரைக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தத் தட்டுப்பாட்டின் உடனடி காரணியாக கோட்டபாய தலைமையிலான அரசே சிங்கள மக்களுக்குத் தெரிகிறது.

எனவே அவரை ஆட்சியைவிட்டுப் போகும்படி கோசமிடுகின்றனர். ஆனால் உண்மையில் இந்நிலமைக்கு ராஜபக்சக்களோ, கோட்டபாயவோ மட்டும் காரணமில்லை.

பட்டாசு வெடித்தும், பாற்சோறு கொடுத்தும் தமிழர் இனவாதத்தைக் கொண்டாடிய அனைத்து சிங்களவர்களும்தான் காரணம். அவர்களின் உசுப்பேற்றலினால்தான் ராஜபக்சக்கள் கடன்வாங்கினார்கள். கொள்ளையடித்தார்கள்.

இந்த விடயங்களை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை கண்டுபிடித்திராத 69 லட்சம் மக்கள், இரண்டு வருடங்களுக்குப் பின்பு கண்டுபிடித்துத் தெருவில் இறங்கிப் போராடுவதெல்லாம் விந்தையாகவே இருக்கிறது.

உண்மையில் இலங்கை நாட்டின் மீள் எழுச்சிக்காகப் போராடும் ஒருவர், கட்டுரையில் சொன்னபடி உருவாக்கப்பட்ட பௌத்த சிங்கள பெரும்பான்மைவாதத்திற்கு எதிராகவே தன் குரலை எழுப்பவேண்டும்.

மகாவம்ச மனநிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள தனிச் சிங்கள அரசுருவாக்கத்திற்கு எதிராகவே போராட வேண்டும். அரசமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

மாற்றமானது பௌத்த சிங்கள பெரும்பான்மை என்கிற மனநிலையில் ஏற்படாதவரை, இத்தகை “#GOHOMEGOTA” வகையறாப் போராட்டங்கள் அனைத்தும் மாரிகாலத்துத் தவளைபோல விடிந்ததும் வெடித்துச் சிதறுமே தவிர, நிரந்தர தீர்வை தராது. கோட்டா போனால் என்ன

மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US