காவி உடைப் பிரச்சினையை தீர்க்க இரண்டு வார அவகாசம் தேவையில்லை
காவி உடைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்ட விவகாரத்த அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு வார கால அவசாகம் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு இன்றோ நாளையோ தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சையினால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் பிரச்சினையின் பாரதூர நிலைமை, நாட்டுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் என்பனவற்றை கருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை பல்வேறு தரப்பினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழு அமைத்து இரண்டு வாரங்கள் வரையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண காத்திருக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மதத் தலைவர்களின் அங்கிகள் தொடர்பில் பொதுவான தீா்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பௌத்த மதத் தலைவர்களுக்கு மட்டும் அல்லது ஏனைய மதத் தலைவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam