தலைமறைவாக பதுங்கியிருந்த ஞானசார தேரர் அதிரடி கைது
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடியாணைக்கமைய, தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் கைது
பிட்டிகல, இஹலஹேரஸ்ஸ, தீனியாவல பகுதியில் அமைந்துள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனம் எனும் ஆசிரமத்தில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.