கார் - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்
ஹபரண பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கித்துல்ஊத்துப் பகுதியில் கார் ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (03) பிற்பகல் சுமார் 2 மணியளவில் இடம்பெற்றதாக ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரண பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், கந்தளாயிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் கித்துல்ஊத்துப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தன.

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்
இதன்போது, முச்சக்கர வண்டி குறுக்குப் பாதையொன்றுக்கு திரும்ப முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த கார் முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.