இன்று பிற்பகல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.10.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் தாக்கம்
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.