ஞானசாரரின் செயலணி, ஒற்றுமையை குலைக்கும் : கோட்டாபயவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் சட்டங்களை சிதறடிக்கும் என்ற காரணத்தினால்,“ ஒரே நாடு ஒரே சட்டம் ” செயலணியைச் செயலிழக்கச் செய்யுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோாிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்“ செயலணியின் காரணமாக நாட்டின் ஒற்றுமை சீா்குலையும் அத்துடன் அழித்து விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு புதியச்சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவேண்டும். இதன் பின்னரே சட்டமா அதிபாின் ஆலோசனையின்போில் தொிவுக்குழு அமைக்கப்படவேண்டும்.
எனினும், அமைச்சரவையில் விவாதிக்காமல் செயலணியொன்றை அமைத்தமையானது, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் அதிகாரங்களை "கேலிக்குரியதாக்கியுள்ளது.
அத்துடன் இது ஜனாதிபதியின், அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
