கைவிடப்பட்ட அரசாங்க மருத்துவர்களின் வேலைநிறுத்தம்
புதிய இணைப்பு
அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாளை மேற்கொள்ளவிருந்த தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அது தொடர்பாக அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் DAT கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் இணைத்து வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சுற்றுநிருபத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சற்று முன்னர் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டம்
அதே போன்று ஜனவரி மாத சம்பளத்துடன் DAT கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாது போகும் மருத்துவர்களுக்கு தனியான வவுச்சர் மூலம் குறித்த கொடுப்பனவை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் காரணமகா நாளை காலை தொடக்கம் எமது சங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருந்த நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்தை உடனடியாக இடைநிறுத்த அரசாங்க மருத்துவர்கள் சங்கத்த்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் ஒரு சில அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயற்பாடுகளை தோற்கடித்து மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் தலையீடு மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (24.01.2024) காலை 08 மணி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
DAT கொடுப்பனவு
வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கையொப்பமிட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை அடுத்தே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனவரி மாதம் முதல் Disturbance Availability and Transport (DAT) கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திறைசேரி வழங்கவில்லை என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |