இலங்கையிலிருந்து 5000 மருத்துவர்கள் வெளியேறும் ஆபத்து! அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
இலங்கையிலிருந்து சுமார் 5000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றக்கூடிய தகுதியுடைய 5,000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என அந்த சங்கம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
உடனடியாக தீர்வு வேண்டும்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
5000 என்பது நாட்டின் நான்கில் ஒரு பகுதி மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏன் மருத்துவர்கள் வெளிநாடு நோக்கி செல்கின்றார்கள் என்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்து அதற்கு தீர்வு திட்டங்களை உடன் வழங்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |