இலங்கை முழுவதும் முக்கிய மருத்துவமனைகளில் போராட்டம் நடத்த GMOA தீர்மானம்
இலங்கையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமான (GMOA), மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள், மருத்துவப் பணியாளர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது.
மருத்துவர்களின் மேலதிக கடமை மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் குறைக்கப்பட்ட தொகைகளை மீள வழங்குதல், நியாயமான சம்பளம் வழங்குதல், மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் போராட்டங்கள்
மேலும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளுதல், மருந்துகளின் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தக் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கி, இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
[BLJCV9