50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கட்டாயமாக கண்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் உறவினர்களுக்கு குளுகோமா நோய் ஏற்பட்டிருந்தால் அவர்களும் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு நடவடிக்கை
குளுகோமா நோய் தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக குளுகோமா வாரம் எதிர்வரும் 10ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குளுகோமாவற்ற உலகம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு குறித்த வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் கண் நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவர் மஹீபால தெரிவித்துள்ளார்.