கோவிட்டை விட பாதிப்பான உலகத் தொற்று : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க நிபுணர்
உலகில் இன்னுமொரு தொற்று நோய் தீவிரமாக பரவும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரொபட் ரெட்ஃபீல்ட் (Robert R.Redfield) அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறப்பு விகிதம்
எனவே, கோவிட்டை போன்ற பெரிய தொற்றுநோய் வருவது உறுதி என்றும், ஆனால் அது எப்போது வரும் என்பது தெரியாமல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் மூலம் ஒரு தொற்றுநோய் பரவி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அது கோவிட்-19 தொற்று நோயை விட மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்
முன்னதாக கோவிட் வைரஸ் தொற்றுநோய் பாதிப்பின்போது இறப்பு விகிதம் வெறும் 0.6வீதமாக இருந்தது எனினும் பறவைக் காய்ச்சலால் பரவும் புதிய தொற்றுநோயால் இறப்பு விகிதம் 20 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில், மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு மூன்றாவது முறையாக கடந்த மாதம் அமெரிக்காவில் பதிவானது.
அதே நேரத்தில் உலகம் முழுவதும் இதுவரை 15 பேருக்கு எச்5என்1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..! சாணக்கியன் கேள்வி
ஐரோப்பாவில் தடை
இதற்கிடையில், பறவைக் காய்ச்சலில் ஐந்து அமினோ அமிலங்கள் இருப்பதால் அவை மனிதர்களுக்கு சென்றடைகின்றன..
இதனால், இந்த நோய் உலகம் முழுவதும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதோடு இது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது என்று ரொபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு காலாவதியான கோழித் தீவனத்தை வழங்கியுள்ளனர்
இதன் காரணமாக, அதில் இருந்த பறவைக் காய்ச்சல் வைரஸ்கள், கால்நடைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து இந்த நடைமுறை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், காட்டுப் பறவைகள் மூலமும் பறவைக் காய்ச்சல் மாடுகளுக்கு பரவியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |