இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், எதிர்வரும் 6 தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் ஜனக்க பத்திரத்ன தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு இரண்டு தினங்களுக்கும் ஒரு தடவை, சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வரும் எனவும்,நாளாந்தம் 70,000 சிலிண்டர்கள் சந்தைக்கு தேவைப்படும் நிலையில், தற்போது நாளாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கு அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும்,சமையல் எரிவாயுவிற்கான கேள்வி, மழை போன்ற காரணங்களே, சமையல் எரிவாயு கொள்வனவிற்காக மக்கள் வரிசையில் இருக்க காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு,