காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரிப்பு! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
பலாங்கொடை சமனலவத்தை பகுதியில் சிலர் காணாமல் போயுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில், பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றை அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நபர்கள் காணாமல் போகின்றமை தொடர்பில் நேற்று(19.05.2023) பலாங்கொடை சமனலவத்தை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. அத்துடன் மற்றுமொரு நபர் கடந்த 3ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் பாடசாலை செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் பலாங்கொடை பிரதேச செயலக அதிகாரிகள், பலாங்கொடை பொலிஸார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
