காதலனை பார்க்க தேனீருடன் பொலிஸ் நிலையம் சென்ற காதலி கைது
கொழும்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது காதலனை சந்திக்க சென்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் போதைப்பொருள் கலந்த பால் தேனீர் கொடுக்க முயன்றபோது பிலியந்தலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது காதலனுக்குக் கொடுப்பதற்காக அவர் கொண்டு வந்த பாணிலும் போதைப்பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
காதலன் கைது
பொல்கசோவிட்டவைச் சேர்ந்த சந்தேக நபரான காதலன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இளைஞனைச் சந்தித்தபோது, போதைப்பொருள் குற்றச்சாட்டில் காதலியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரம் அந்த இளைஞனுடன் பேசிய பெண், பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியேறி, பால் தேநீர் அடங்கிய சிறிய பையுடன் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பினார்.
தேனீரில் சிக்கிய மர்மம்
இதன்போது ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரி பெண் கொண்டு வந்த பால் தேநீர் மற்றும் பாணை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இதன்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரான பெண் களுபோவில பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam