கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி:நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு குதிரை பந்தய திடலில் தனது காதலியான பல்கலைக்கழக மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணை இன்று (30.01.2023) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
சாட்சி அளித்த மாணவியின் தந்தை

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவியின் தந்தையும் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
கொலை சம்பவம்

கடந்த வாரம் கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் காதலன் எனக் கூறும் இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam