கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிரிழந்த மாணவியின் காதலன் எனக் கூறும் இளைஞனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பெயர் பசிந்து சதுரங்க என்ற இளைஞன் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மாலை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஒருவரை அணுகி, அவரது மன நிலை குறித்து அறிக்கை பெறுமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று காதலனால் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற 24 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது கழுத்தை அறுத்து கொன்ற காதலனும் அவருடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் என தெரியவந்துள்ளது. வெல்லம்பிட்டியவில் வசிக்கும் பசிந்து சதுரங்க என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன், “எனக்கு அவர் வேண்டும். அவர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவரை உண்மையாகவும் முழு மனதுடன் நேசித்தேன். அவர் வேறொருவரிடம் செல்ல முயன்றார்” என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாகும். இவர்கள் தற்போது கிரிவத்துடுவ சந்தியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
