நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு: ஆறு வயது மகள் பலி தந்தை படுகாயம்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு வயது மகள் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பு - மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று (17.09.2023) மாலை குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட தந்தை பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு
துப்பாக்கிச் சூடு
அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவியும் மகளும் முச்சக்கரவண்டியில் அங்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் வெளியேறும் போது நீதிமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படகிறது.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
