நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிம் ஒப்படைப்பு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் தனிப்பட்ட கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரரின் வீட்டுக்கு முன்பாக நேற்று (17.09.2023) இரவு 10.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு, மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
வாகனமொன்றில் வருகை தந்த மர்ம நபர்கள், உத்திக பிரேமரத்ன எம்.பி.யின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களின்றி தப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன, அண்மையில் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றையாற்றி சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.