நாமலை ஆட்சி பீடம் எற்ற வீதியில் இறங்கிய மகிந்தவின் சகாக்கள்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்த்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் மொட்டுக் கட்சி தரப்பினர் தற்போது நாமலுக்காக வீதியில் இறங்கிவிட்டனர் எனலாம்.
இப்போது இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தப்பட்டால் அநுர தரப்பு நிச்சயம் தோல்வியடையும் எனவும் அடுத்த ஜனாதிபதியாக நாமலே பதவியேற்பார் எனவும் பல எதிர் தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களில் சில முக்கியஸ்தர்கள் பொது இடங்களுக்கு தாம் செல்வதாக குறிப்பிட்டு வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் போது மக்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தெரிவு செய்து தாங்கள் பெரும் தவறு செய்து விட்டதாக கூறியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர், தமது சமூக வலைதள பதிவுகளில்..
இவை போன்ற அரசியல் களத்தில் நடக்கும் பல முக்கிய விடயங்களை கலந்துரையாடும் வகையில் வருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,