பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு முக்கிய தகவல் - நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்
பிரித்தானியா எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வீட்டு கழிவுகளை சேகரிக்கும் முறையில் பாரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக 400 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் Simpler Recycling எனும் புதிய நடைமுறை எதிர்வரும் மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நடைமுறைக்கு அமைய 7 வெவ்வேறு கூடைகளுக்குப் பதிலாக, வீடுகளில் 4 வகை கழிவு அகற்றல் பெட்டிகளே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீள்சுழற்சி பொருட்கள்
மீள்சுழற்சி செய்ய முடியாத குப்பைகள், உணவுக் கழிவுகள், காகிதம் மற்றும் அட்டைப் பெட்டிகள், ஏனைய பிளாஸ்டிக், உலோகம் மற்றும் கண்ணாடி போன்ற மீள்சுழற்சி பொருட்கள் இதில் அடங்கும்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, 39 பொருட்களை கழிவு அகற்றும் தொட்டில் போட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை வீடுகளுக்கு மட்டுமன்றி, வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri