அம்பாறை கடற்பரப்பில் சிக்கிய பல கோடி ரூபா பெறுமதியான இராட்சத மீன்
அம்பாறை (Ampara) காரைதீவு கடல் பகுதியில் இருந்து கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா (ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன் சிக்கியுள்ளது.
குறித்த இராட்சத மீனானது ஆழ்கடலில் கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலார்களின் தூண்டிலிலேயே அகப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள 49 கிலோ நிறையுடைய மீனை விற்பதற்கான முயற்சியில் கடற்றொழிலாளர்கள் இறங்கியுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள்
கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |