அம்பாறையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபர் கைது
அம்பாறை (Ampara) - பெரிய நீலாவணையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்ததன் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர்புறத்தில் சந்தேகத்திற்கிடமாக நபரொருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதனடிப்படையில், 24 வயதான சந்தேக நபர் ஒருவர் பெரியநீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2360 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்பின்னர், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் சூட்சுமமான முறையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையிலேயே, சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
