சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம் : புதிய திகதிகளை பரிந்துரைத்த சஜித் தரப்பு
தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayaka) இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளது
முன்னதாக தேசிய மக்கள் சக்தி சில திகதிகளை பரிந்துரைத்துள்ள போதும் அதற்கு உரிய பதில்கள் வழங்கப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா இந்த புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளார்.
பரிந்துரைகளுக்கான பதில்கள்
தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த திகதிகளை பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, இரண்டு கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விவாதம் ஜூன் 3, 4, 5, 6ஆம் அல்லது 7ஆம் திகதிகளிலும், பொருளாதார நிபுணர்கள் இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30 அல்லது 31ஆம் திகதிளிலும் நடத்தப்படலாம் என்று நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பரிந்துரைகளுக்கான பதில்கள் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |